Special Junior Pattimandram
Thanks to Karthik uncle from Kudil Arattai for giving me an opportunity to be part of Navaratri Special - October 24 2020 - Special Junior Pattimandram. Here is the recording Very big and Special Thanks to G.Gnanasambandan sir for being the judge and Mrs. Sharmila Banu for the great support. Script அரபிக்கடலை போன்ற அன்பும் பசிபிக்கடலை போன்ற பண்பும் நிறைந்த எல்லோருக்கும் என் பணிவான வணக்கம் பொறுமையை விட மேலான தவம் இல்லை... திருப்தியை விட மேலான இன்பம் இல்லை .... இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை .... மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை .... தமிழை விட சிறந்தது பெருமைக்குரியது வேறு எதுவுமே இல்லை ... என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.. நடுவர் அவர்களே ஒரு சிறிய கதையின் மூலம் என் துவக்கத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்... ஒரு 13 வயது மிக்க சிறுவன் அவன் பிறந்தது என்னவோ தமிழ்நாட்டில் தான்.. அவன் எழுந்தான், நடந்தான், ஏன் தடுமாறிக்கூட கீழே விழுந்தான. கண் விழித்தது காது கேட்டது பக்கத்து மாநிலத்து மொழியை ஆனால் அவன் மூளையும் மனதும் சிந்திக்க ஆரம்பித்தது தம...