Special Junior Pattimandram
Script
அரபிக்கடலை போன்ற அன்பும்பசிபிக்கடலை போன்ற பண்பும் நிறைந்த எல்லோருக்கும் என் பணிவான வணக்கம்
பொறுமையை விட மேலான தவம் இல்லை...
திருப்தியை விட மேலான இன்பம் இல்லை ....
இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை ....
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை ....
தமிழை விட சிறந்தது பெருமைக்குரியது வேறு எதுவுமே இல்லை ...
என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்..
நடுவர் அவர்களே ஒரு சிறிய கதையின் மூலம் என் துவக்கத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...
ஒரு 13 வயது மிக்க சிறுவன் அவன் பிறந்தது என்னவோ தமிழ்நாட்டில் தான்.. அவன் எழுந்தான், நடந்தான், ஏன் தடுமாறிக்கூட கீழே விழுந்தான.
கண் விழித்தது காது கேட்டது பக்கத்து மாநிலத்து மொழியை ஆனால் அவன் மூளையும் மனதும் சிந்திக்க ஆரம்பித்தது தமிழ்நாட்டின் சிறப்பை மட்டுமே...
அது யாராக இருக்கும் என்று நீங்கள் அனைவரும் வியந்து சிறந்து பார்ப்பது எனக்குப் புரிகிறது, அவர், சர்வேஷ் என்ற மாணவனாக உங்கள் முன் நிற்கின்றேன்.
வாட்ஸப்பில் வாழும் காலம் இந்த காலமாக இருக்கலாம்
ஆனாலும் வந்தோரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் பிறந்ததாலோ என்னவோ ஆயிரம் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் அன்னைத்தமிழின் நுட்பத்தை வளர்க்க என் குடும்பம் உதவுகிறது என்றால் அதுதான் தமிழ் குடும்பமும் எங்கள் தமிழக மாணவர்களும்.
பிறந்தவுடன் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை..
வாய்திறந்து பேசிய வார்த்தை இன்று தமிழ் மணம் கமழ
முத்தமிழை மூச்சாகி பேசுவது தான் எங்கள் சிறப்பு! தமிழின் மதிப்பு!
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"... என்பார்கள்
அதன் எழுத்துக்கெல்லாம் அகரம் முதன்மை போல
மொழிகளுக்கெல்லாம் முதன்மையாம் தாய் தமிழ் என்று கூறுவது மகிழ்ச்சி.
நான் தமிழ் நாட்டிலும் கூட இல்லை
பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழுக்காக பேசுகிறேன் என்றால்...
காரணம் பைந்தமிழின் சிறப்பு.
தமிழை பள்ளிப் படமாகக்கொண்டு படிக்க இயலவில்லை,
ஆனால் தாயின் வாய்ச்சொல்லலாலும்;
தந்தையின் வழிகாட்டுதலாலும்,
தமிழ் மொழி எனது இதயத்தில் நீங்கா இடம் பிடித்தது.
என்றும் தமிழ் வளர்க- கலையாவும் தமிழ் மொழியால் விளைந்து ஓங்குக!!!
"இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக" என்றார் பாவேந்தர்
அதன்படி தமிழை முறைப்படி வாழ்க்கையின் முதற்படியாக கொண்டு இருப்பவர்கள் தமிழக மாணவர்கள் மட்டுமே மட்டுமே என்று கூறுவதில் நெகிழ்ச்சி அடைந்து வாய்ப்புக்கு மகிழ்ச்சி கூர்ந்து விடைபெறுகிறேன் நன்றி!! வணக்கம்!
Comments
Post a Comment